பாடல்
கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம்
நல்லவர்க்கு ஒரு குணம்
கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம்
நல்லவர்க்கு ஒரு குணம்
கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
தாயின் குரல் கேட்டதுண்டு
தந்தை முகம் பார்த்ததுண்டு
ஜீவனற்ற கண்களுக்கு
தேவன் முகம் தெரிகிறது
தாயின் குரல் கேட்டதுண்டு
தந்தை முகம் பார்த்ததுண்டு
ஜீவனற்ற கண்களுக்கு
தேவன் முகம் தெரிகிறது
அந்த மரக் கிளைதனிலே
வந்தமர்ந்த பறவை ஒன்று
அந்த மரக் கிளைதனிலே
வந்தமர்ந்த பறவை ஒன்று
தந்ததொரு அன்பு கண்டு
தந்தை தன்னை மறந்ததுண்டு
கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம்
நல்லவர்க்கு ஒரு குணம்
கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
ஏற்றி விட்ட ஏணி ஒன்று
நின்றபடி நிற்கிறது
ஏறி விட்ட ஒரு மனமோ வேறு
வழி நடக்கிறது
ஏற்றி விட்ட ஏணி ஒன்று
நின்றபடி நிற்கிறது
ஏறி விட்ட ஒரு மனமோ வேறு
வழி நடக்கிறது
ஏற்றியதும் குற்றமில்லை
ஏணியிலும் பாவமில்லை
ஏற்றியதும் குற்றமில்லை
ஏணியிலும் பாவமில்லை
மாற்றியது கடவுள் என்னும்
மாயக்காரன் லீலையம்மா
கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
தேவனவன் கோயிலிலே கோடை
வெய்யில் சுடுகிறது
தேவி அவள் வாசலிலோ செல்வ
மழை பொழிகிறது
தேவனவன் கோயிலிலே கோடை
வெய்யில் சுடுகிறது
தேவி அவள் வாசலிலோ செல்வ
மழை பொழிகிறது
நல்லவர்க்குப் பொருள்
எதற்கு? நாடி வரும் புகழ் எதற்கு?
நல்லவர்க்குப் பொருள்
எதற்கு? நாடி வரும் புகழ் எதற்கு?
உன்னுடைய வசந்தத்திலே
ஒன்றும் இல்லை ரசிப்பதற்கு
கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம்
நல்லவர்க்கு ஒரு குணம்
கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்.......