பாடல்
வன்பசிப் பிணிக்குணவு நம் கையில் கிட்டிலும்
வாய்க்கு மெட்டுமோ முன் பயில் வினைக் கவர
மாயமாய் மறையும்
மோஹமும் பாழ்ப்படும்
இன்பமென்பது கானல் நீர்முயல் கொம்புகாண்
எல்லாம் முடிவிலே துன்பமே
உயிரன்பு வைத்தல் விவேகமே
சுக போகமே
துன்பமே நிறை வாழ்விலே
அலை கடலிலே சுழல் துரும்பு போல்
என்புதோல் போத்தி உடலிலே உழன்
இருதலைக் கொள்ளி எறும்பு போல்
வன்புசேர் அறுபகை வளர் நெஞ்சக் குரங்கின்
கைப்பெறும் மாலைப் போல் அன்பர்காள் இன்பமின்ப
மென்றுண்மை அறிவிழந்து மெய் மயங்கினோம்
Lyrics
vanpasip piNikkuNavu nam kaiyil kittilum
vaaikku mettumoe mun payil vinaik kavara
maayamaai maRaiyum
moehamum paazhppadum
inbamenbadhu kaanal neermuyal kombukaaN
ellaam mudivilae thunbamae
uyiranbu vaiththal vivaegamae
suga boegamae
thunbamae niRai vaazhvilae
alai kadalilae suzhal thurumbu poel
enbuthoel poeththi udalilae uzhan
irudhalaik koLLi eRumbu poel
vanbusaer aRupagai vaLar nenjak kurangin
kaippeRum maalaip poel anbarkaaL inbaminba
mendruNmai aRivizhandhu mei mayanginoem