பாடல்
கண்டசாலா: ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது
சுசீலா: ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது

ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
கண்டசாலா: நீ எரப்பு கூட எடுத்து வீச இடுப்பை வளைக்கும் தினுசு
அதை எதுக்க நின்னு பாக்கும் போது எங்கோ போகுது மனசு
கண்டசாலா: ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
சுசீலா: அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது
இருவரும்: ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
சுசீலா: ஓ...
கயத்தை நீங்க இழுக்கும் போது கன்னம் செவந்து ஜொலிக்குது
அதை காணும் போது என்னையும் சேர்த்து காந்தம் போல இழுக்குது
சுசீலா: ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
கண்டசாலா: அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது
இருவரும்: ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
கண்டசாலா: கண்ணாடி வளை கலகலங்க கைய வீசுற வீசு
நீ கைய வீசுற வீசு
அதைக் கற்பனை செய்து பாட நினைக்க எல்லாம் பழசா போச்சு
கண்டசாலா: ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
சுசீலா: அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது
இருவரும்: ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
சுசீலா: முன்னாலிருந்த தரிசு நிலங்கள் பொன்னா விளையலாச்சி
முயற்சி தன்னை ஊராரெல்லாம் புகழ்ச்சியாக பேசலாச்சி

.