Follow on


Old Thamizh film songs

ariyadhu ketkin varivadiveloy

Singer: K.B.Sunderambal
Music: KV.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Kandhan Karunai (1967)

பாடல்

முருகா (வசனம்)
அவ்வையே உலகில் அரியது என்ன?

சு: அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு
செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி
பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும்... தவமும்... தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழி பிறந்திடுமே

முருகா (வசனம்)
அரியது கேட்டமைக்கு அழகான தமிழில்
விளக்கம் தந்த மூதாட்டியே
கொடியது என்ன?

சு: கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை...
அதனினும் கொடிது ஆற்றொணா கொடு நோய்
அதனினும் கொடிது அன்பில்லா பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால்
இன்புற உண்பது தானே

முருகா (வசனம்)
மிக்க மகிழ்ச்சி.
சொல்லால் தமிழால்
வெல்லாத உலகையெல்லாம் வெல்லும்
திறமை படைத்த அவ்வையே
பெரியது என்ன?

சு: பெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமும் நான் முகன் படைப்பு
நான் முகன் கரிய மால் உந்தியில் வந்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலை கடலோ குருமுனியன்
கையில் அடக்கம்
குருமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒரு தலை பாரம்
அரவோ உமையவள் சிறு விரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத்தொடுக்கம்
தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே....

முருகா (வசனம்)
அவ்வையே வானவரும் உனது வாக்கிற்கு
அடிமையாகி விடுவர் என்றால்
அதில் வியப்பில்லை.
இனியது என்ன?

சு: இனியது கேட்கின் தனி நெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியை தொழுதல்
அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பது தானே

முருகா (வசனம்)
அரியது கொடியது பெரியது இனியது
அனைத்திற்கும் முறையோடு
விடை பகன்ற அவ்வையே
புதியது என்ன?

சு: என்றும் புதியது
பாடல் என்றும் புதியது
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா உன்னை பாடும்
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா உன்னை பாடும்
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது....

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த
அழகே என்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த
அழகே என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட
இளமை என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட
இளமை என்றும் புதியது
உன்னை பெற்ற அன்னையற்கு
உனது லீலை புதியது
உன்னை பெற்ற அன்னையற்கு
உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கும்
வேலும்... மயிலும்...
உனது தந்தை இறைவனுக்கும்
வேலும் மயிலும் புதியது
முருகா உன்னை பாடும்
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது....

திங்களுக்கும் ஞாயிருக்கும்
கந்தன் மேனி புதியது
திங்களுக்கும் ஞாயிருக்கும்
கந்தன் மேனி புதியது
தேர்ந்தவர்க்கு வழங்கும்
கந்தன் கருணை புதியது
தேர்ந்தவர்க்கு வழங்கும்
கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண
உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண
உனது தமிழ் இனியது
முதலில் முடிவது முடிவில் முதலது
முதலில் முடிவது முடிவில் முதலது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு
ஆறுமுகம் புதியது

.