பாடல்
ரா: ஜதி....
ஜ: செங்கையில் வண்டு கலின்
செங்கையில் வண்டு கலின்
கலினென்று ஜெயம் ஜெயம் என்றாட
இடை சந்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட
செங்கையில் வண்டு கலின்
கலினென்று ஜெயம் ஜெயம் என்றாட
இடை சந்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட
இரு கொங்கை கொடும் பகை
வென்றனம் என்று குழைந்து குழைந்தாட
மலர்ப் பைங்கொடி நங்கை
வசந்த சௌந்தரி பந்து பயின்றாளே
கொங்கை கொடும் பகை
வென்றனம் என்று குழைந்து குழைந்தாட
மலர்ப் பைங்கொடி நங்கை
வசந்த சௌந்தரி பந்து பயின்றாளே
கொங்கை கொடும் பகை
வென்றனம் என்று குழைந்து குழைந்தாட
மலர்ப் பைங்கொடி நங்கை
வசந்த சௌந்தரி பந்து பயின்றாளே
அவள் பந்து பயின்றாளே....
லீ: தண்ணமுதுடன் பிறந்தாய் வெண்ணிலாவே
தண்ணமுதுடன் பிறந்தாய் வெண்ணிலாவே
அந்த தண்ணளியை ஏன் மறந்தாய் வெண்ணிலாவே
தண்ணமுதுடன் பிறந்தாய் வெண்ணிலாவே
அந்த தண்ணளியை ஏன் மறந்தாய் வெண்ணிலாவே
தண்ணமுதுடன் பிறந்தாய் வெண்ணிலாவே....
பெண்ணுடன் பிறந்ததுண்டு வெண்ணிலாவே
பெண்ணுடன் பிறந்ததுண்டு வெண்ணிலாவே
எந்தன் பெண்மை கண்டு காயலாமோ வெண்ணிலாவே
தண்ணமுதுடன் பிறந்தாய் வெண்ணிலாவே
அந்த தண்ணளியை ஏன் மறந்தாய் வெண்ணிலாவே
தண்ணமுதுடன் பிறந்தாய் வெண்ணிலாவே
கோ: சொல்ல கேளாய் குறி சொல்ல கேளாய்
முல்லை பூங்குழலாளே சொல்ல கேளாய்
நன்னகரில் வாழ்முத்து மோகன பசுங்கிளியே
சொல்ல கேளாய் குறி சொல்ல கேளாய்...
தோகை நீ அவனை கண்டு மோகித்தாய்..அம்மே
அது சொல்ல பயந்திருந்தேன்..சொல்லுவேன்
தோகை நீ அவனை கண்டு மோகித்தாய்..அம்மே
அது சொல்ல பயந்திருந்தேன்..சொல்லுவேன்
மோகினியே உன்னுடைய கிருகிருப்பெல்லாம்
அவன் மோக கிருகிருப்படி மோகன கள்ளி
சொல்ல கேளாய் குறி சொல்ல கேளாய்
முல்லை பூங்குழலாளே சொல்ல கேளாய்.....
ஜ: இருண்ட மேகஞ்சுற்றி சுருண்டு சுழி எறியும் கொண்டையாள்
குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழி கெண்டையாள்
இருண்ட மேகஞ்சுற்றி சுருண்டு சுழி எறியும் கொண்டையாள்
குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழி கெண்டையாள்
அரம்பை தேச வில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள்
அரம்பை தேச வில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள்
பிறர் அறிவை மயக்குமொரு கருவம் இருக்கும்
மங்கை பருவத்தாள்...மங்கை பருவத்தாள்
பிறர் அறிவை மயக்குமொரு கருவம் இருக்கும்
மங்கை பருவத்தாள்...மங்கை பருவத்தாள்
.