பாடல்
கோ: சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சிந்திய கண்ணீர் மாறியதாலே
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சு: சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சிந்திய கண்ணீர் மாறியதாலே
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
அன்பு திருமுகம் காணாமல் நான்
துன்ப கடலில் நீந்தி வந்தேன்
அன்பு திருமுகம் காணாமல்
நான் துன்ப கடலில் நீந்தி வந்தேன்
கோ: கால புயலில் அணையாமல்
நெஞ்சில் காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
கால புயலில் அணையாமல்
நெஞ்சில் காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
சு: உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ள தாமரை மலராதோ
உள்ள தாமரை மலராதோ
கோ: எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இருண்ட பொழுதும் புலராதோ
இருண்ட பொழுதும் புலராதோ
சு: சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சிந்திய கண்ணீர் மாறியதாலே
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
தேன் மலராடும் மீன் விளையாடும்
தேன் மலராடும் மீன் விளையாடும்
அருவியின் அழகை காணீரோ
கோ: நான் வரவில்லை என்பதனால் உன்
மீன் விழி சிந்திய கண்ணீரோ
நான் வரவில்லை என்பதனால் உன்
மீன் விழி சிந்திய கண்ணீரோ
சு: மலர் மழை போலே மேனியின் மேலே
மலர் மழை போலே மேனியின் மேலே
குளிர் நீர் அலைகள் கொஞ்சிடுதே
கோ, சு: சிரிக்கின்றோம் இன்று சிரிக்கின்றோம்
சிந்திய கண்ணீர் மாறியதாலே
சிரிக்கின்றோம் இன்று சிரிக்கின்றோம்
.