Follow on

Old Thamizh film songs

engirundho vandhaan

Singer: Seerkazhi Govindarajan (SV.Rangarao, Sivaji Ganesan, background song)
Music:  KV.Mahadevan
Lyrics: Mahakavi Bharathiyar
Film: Padikkadha Medhai (1960)

பாடல்

எங்கிருந்தோ... வந்தான்...
எங்கிருந்தோ வந்தான் இடை ஜாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான் இடை ஜாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
கண்ணன்....
எங்கிருந்தோ... வந்தான்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்கார பாட்டிசைப்பான்...
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல்
என் குடும்பம் வண்ணமுர காக்கின்றான்
வாய் முணுத்தல் கண்டறியேன்
கண்ணன்....
எங்கிருந்தோ வந்தான் இடை ஜாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
கண்ணன்....எங்கிருந்தோ... வந்தான்

பற்று மிகுந்து வர பார்க்கின்றேன்
கண்ணனால் பெற்று வரும் நன்மையெல்லாம்
பேசி முடியாது...

நண்பனாய்...மந்திரியாய்...நல்லாசிரியனுமாய்

யதா யதா ஹி தர்மஸ்ய க்ளானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்

பண்பிலே தெய்வமாய்...பார்வையிலே சேவகனாய்
ரங்கன்... எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
ரங்கன்... எங்கிருந்தோ
எங்கிருந்தோ ரங்கன்...
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா....

.