பாடல்
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு

பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு...
கொடுப்பதற்கும்... சிரிப்பதற்கும்
கொடுப்பதற்கும் சிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா

என்றும் குழந்தையை போல் வாழ்ந்துவிட்டால் துன்பம் தோன்றுமா
என்றும் குழந்தையை போல் வாழ்ந்துவிட்டால் துன்பம் தோன்றுமா
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு...
வாழை மரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா
வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா
சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா
சுதந்திரமாய் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு...
கல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்
காட்டு கவரி மானும் பெண்களைப்போல் மானத்தை காக்கும்

பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே
நெஞ்சில் பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா

.