பாடல்
TAM: ஆசையாக பேசி பேசி
ஆளை ஏய்க்காதே மாமா
ஆசையாக பேசி பேசி
ஆளை ஏய்க்காதே மாமா
காச பெருசா நெனச்சு மனசே
கஷ்டப் படுத்தாதே ஆமா
காச பெருசா நெனச்சு மனசே
கஷ்டப் படுத்தாதே ஆமா
NSK: பணத்த எண்ணி கணக்கு
பாக்கும் மனுஷன் நானோடி பெண்ணே
பணத்த எண்ணி கணக்கு
பாக்கும் மனுஷன் நானோடி பெண்ணே
கொணத்துக்காக எதையும் செய்யும்
குமுணன் அல்லோடி பெண்ணே
கொணத்துக்காக எதையும் செய்யும்
குமுணன் அல்லோடி
TAM: போடாத நகையென்ன போட்டு
யாரும் போடாத நகையென்ன போட்டு
இந்த பொய் வார்த்தை சொன்னா
பொருக்கவே மாட்டேன்
பாடகம் தண்டையோடு பொருத்து
சீனி பாடகம் தண்டையோடு பொருத்து
சீனி பழசையே மாத்தி என்ன பண்ணினே புதுசு
பாரிலே யாவர்க்கும் உண்டா
வைரம் உண்டா கண்டதுண்டா
மோட்டார் கார்தனிலே போகிறது
கனவினில் யார் கண்டா
நாடகம் சினிமாவும் உண்டா
கண்டதுண்டா போனதுண்டா
ஒரு நாளாவதுங்களுடன்
நான் வந்ததுண்டா
போடாத நகையென்ன போட்டு
NSK: ஏம்...ஏம்மா..வைரம், அ..சினிமா, நாடகம்
எப்படியிருக்கு? அடியே...
வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
மனிஷன் சொன்னா வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
வேலையத்த பணக்காரன் புள்ளைக போல
காரியம் இல்லாம நேரம் போக்காதேன்னா
வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
மனிஷன் சொன்னா வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
சிலுக்கு பொடவ கேக்குதா
இல்லா ஒடம்பு குனிஞ்சு நடக்கேங்குதா
காதுரெண்டும் சீம கமலம் கேக்குதா
போடாபோனா செவிடா போறேன் எங்குதா?
காதுரெண்டும் சீம கமலம் கேக்குதா
போடாபோனா செவிடா போறேன் எங்குதா?
தாலி உள்ள கழுத்தட்டிகை இல்லாட்டி
சுளுக்குரேன் எங்குதா
காப்பில்லா கை சோத்தைஆக்க மாடேங்குதா
காசு கொடுத்து வாங்கி ஆசையோடு மூக்கில்
பேசரி போடாட்டி வாசம் புடிக்காதா
வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
மனிஷன் சொன்னா வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
நவாகரீகத்திலே நல்லதை கொள்ளோணும்
நாலு சாத்திரமும் புராணமும் படிக்கோணும்
தவராமல் தாய் மொழி தமிழை வளர்க்கோணும்
தருமத்தை ஒரு நாளும் மறவாது இருக்க வேணும்
வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
மனிஷன் சொன்னா வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
Lyrics
TAM: aasaiyaaga paesi paesi
aaLai aeikkaadhae maamaa
aasaiyaaga paesi paesi
aaLai aeikkaadhae maamaa
kaasa perusaa nenachchu manasae
kashtap paduththaadhae aamaa
kaasa perusaa nenachchu manasae
kashtap paduththaadhae aamaa
NSK: paNaththa eNNi kaNakku
paakkum manushan naanoedi peNNae
paNaththa eNNi kaNakku
paakkum manushan naanoedi peNNae
goNaththukkaaga edhaiyum seiyum
kumuNan alloedi peNNae
goNaththukkaaga edhaiyum seiyum
kumuNan alloedi
TAM: poedaadha nagaiyenna poettu
yaarum poedaadha nagaiyenna poettu
indha poi vaarththai sonnaa
porukkavae maattaen
paadagam thandaiyoedu poruththu
cheeni paadagam thandaiyoedu poruththu
cheeni pazhasaiyae maaththi enna paNNinae pudhusu
paarilae yaavarkkum uNdaa
vairam uNdaa kandadhundaa
moettaar kaardhanilae poegiRadhu
kanavinil yaar kandaa
naadagam sinimaavum uNdaa
kaNdadhundaa poenadhuNdaa
oru naaLaavadhungaLudan
naan vandhadhundaa
poedaadha nagaiyenna poettu
NSK: aem...aemmaa..vairam, a..sinimaa, naadagam
eppadiyirukku? adiyae...
vevaram purinju koLLaNum
manishan sonnaa vevaram purinju koLLaNum
vaelaiyaththa paNakkaaran puLLaiga poela
kaariyam illaama naeram poekkaadhaennaa
vevaram purinju koLLaNum
manishan sonnaa vevaram purinju koLLaNum
silukku podava kaekkudhaa
illaa odambu kuninju nadakkaengudhaa
kaadhurendum seema kamalam kaekkudhaa
poedaapoenaa sevidaa poeRaen engudhaa?
kaadhurendum seema kamalam kaekkudhaa
poedaapoenaa sevidaa poeRaen engudhaa?
thaali uLLa kazhuththattigai illaatti
suLukkuraen engudhaa
kaappillaa kai soeththaiaakka maataengudhaa
kaasu koduththu vaangi aasaiyoedu mookkil
baesari poedaatti vaasam pudikkaadhaa
vevaram purinju koLLaNum
manishan sonnaa vevaram purinju koLLaNum
navaagareegaththilae nalladhai koLLoeNum
naalu saaththiramum puraaNamum padikkoeNum
thavaraamal thaai mozhi thamizhai vaLarkkoeNum
dharumaththai oru naaLum maRavaadhu irukka vaeNum
vevaram purinju koLLaNum
manishan sonnaa vevaram purinju koLLaNum