பாடல்
சு: குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வர வேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்
குயிலாக நான் இருந்தென்ன
குழலாக நீ வர வேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்
சௌ: பாட்டோடு பொருள் இருந்தென்ன
அரங்கேறும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீ வர வேண்டும் வர வேண்டும்
பாட்டோடு பொருள் இருந்தென்ன
அரங்கேறும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீ வர வேண்டும் வர வேண்டும்....
சு: செந்தாழை கூந்தலிலே செந்தூரம் நெற்றியிலே
செவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள்
சௌ: கல்யாண மேளம் கொட்ட கண்பார்வை தாளம் தட்ட
பெண் பாவை மாலை சூடும் மன்னன் வருவான்
பாட்டோடு பொருள் இருந்தென்ன
அரங்கேறும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீ வர வேண்டும் வர வேண்டும்
சு: குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வர வேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்...
சௌ: பொன் மேனி தேர் அசைய என் மேனி தாங்கி வர
ஒன்றோடு ஒன்றாய் கூடும் காலமல்லவோ
சு: நில் என்று நாணம் சொல்ல செல் என்று ஆசை தள்ள
நெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ
குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வர வேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்
.