Old Thamizh film songs
paatu paadava
Singer: A.M.Rajah
Music: A.M.Rajah
Lyrics: Kannadasan
Film: Then Nilavu (1961)
Cast: Jemini Ganesan, Vyjayanthimala, Nambiar, Thangavelu, Saroja
பாடல் (Lyrics)
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்ல வா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா... பார்த்து பேசவா...
பாடம் சொல்லவா பறந்து செல்ல வா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்ல வா
மேக வண்ணம் போல மின்னும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே....
மேக வண்ணம் போல மின்னும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா...
பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
மாலையல்லவா நல்ல நேரமல்லவா
இன்னும் வானம் பார்த்த பூமி போல வாடலாகுமா...
பாட்டு பாடவா... பார்த்து பேசவா...
பாடம் சொல்லவா பறந்து செல்ல வா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா... பார்த்து பேசவா...
பாடம் சொல்லவா பறந்து செல்ல வா.....
அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே
நதி அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே....
அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே
நதி அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே
கண்ணிறைந்த காதலனை காணவில்லையா
இந்த காதலுக்கு தேனிலவில் ஆசை இல்லையா....
கண்ணிறைந்த காதலனை காணவில்லையா
இந்த காதலுக்கு தேனிலவில் ஆசை இல்லையா
காதல் தோன்றுமா இன்னும் காலம் போகுமா
இல்லை காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா...
பாட்டு பாடவா... பார்த்து பேசவா...
பாடம் சொல்லவா பறந்து செல்ல வா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா... பார்த்து பேசவா...
பாடம் சொல்லவா பறந்து செல்ல வா
|