Follow on


Old Thamizh film songs

mannavan vandhaanadi

P Susheela, Chorus
Music: K V Mahadevan
Lyrics: Kannadhasan
Film: Thiruvarutchelvar (1967)
Cast: Sivaji Ganesan, Padmini, Jemini Ganesan, Savithri, Nagesh, Manorama

பாடல்

குழுவினர்: கலை மகள் துணை கொண்டு கலை வென்று
புகழ் கொண்ட காவலன் வாழ்க வாழ்க

மலை மகள் வரம் கொண்டு மலை போன்ற
பலம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க

திரு மகள் அருள் கொண்டு பொருள் கொண்ட
திருவருட் செல்வனே வாழ்க வாழ்க

இயல் இசை நாடகம் முத்தமிழ்
காக்கின்ற தலைவனே வாழ்க வாழ்க

குடி மக்கள் மனம் போல முடியாட்சி
காண்கின்ற கொற்றவா வாழ்க வாழ்க

நின் கொடி வாழ்க படை வாழ்க குடி வாழ்க
குலம் வாழ்க நலமும் பல்லாண்டு வாழ்க

PS: மன்னவன் வந்தானடி தோழி
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி

மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்
மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்
மன்னவன் வந்தானடி தோழி

செந்தமிழ் சொல் எடுத்து இசை தொடுப்பேன்
வண்ண சந்தத்திலே கவிதை சரம் தொடுப்பேன்
மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்
மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்
இனி முப்பொழுதும் கற்பனையில்
அற்புதமாய் வாழ்ந்திருக்கும்

மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி

தூவிய பூவினில் மேனிகள் ஆடிட
நாயகன் நாயகி பாவனை காட்ட வரும்
மன்னவன் வந்தானடி...(ஜதி)....

ச.. ரி.. க.. ம.. ப.. த.. நி.....
சரிகமபதனி சுரமொடு ஜதியொடு
நாத கீத ராக பாவம் தான் பெறவே
மன்னவன் வந்தானடி...(ஜதி)....

காதற் கவிதை கடலெனப் பெருகிட
மாதர் மனமும் மயிலென நடமிடவே
மன்னவன் வந்தானடி...(ஜதி)....

சிறு மலர் மனமொரு குறு நகை நலம் பெற
மலர்விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே
மன்னவன் வந்தானடி...(ஜதி)....

தித்தித்தால் அது செம் பொற் கிண்ணம்
தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம்...(ஜதி)....
சித்தத்தால் ஒரு காதற் சின்னம்
தத்தித் தாவென பாவை முன்னம்
என் மன்னவன் ...(ஜதி)....

ச.... சதமது தரவா
ரி.... ரிகமபதனிசா
க.... கருணையின் தலைவா
ம.... மதி மிகு முதல்வா
ப.... பரம் பொருள் இறைவா
த.... தனிமையில் வரவா
நி.... நிறையருள் பெறவா
ஆளும் புவி ஏழும் கடல் ஏழும்
நடமாடும் படி வாராய்..அருள் தாராய்...
ஆளும் புவி ஏழும் கடல் ஏழும்
நடமாடும் படி வாராய்..அருள் தாராய்...
அனுதினம் உனை வழிபடும் மடமயில்
இனி ஒரு தலைவனைப் பணிவதில்லை

மன்னவன் வந்தானடி...(ஜதி)....

Lyrics

Chorus: kalai magaL thuNai koNdu kalai vendru
pugazh koNda kaavalan vaazhga vaazhga

malai magaL varam koNdu malai poendra
balam koNda mannavan vaazhga vaazhga

thiru magaL aruL koNdu poruL koNda
thiruvarut selvanae vaazhga vaazhga

iyal isai naadagam muththamizh
kaakkindra thalaivanae vaazhga vaazhga

kudi makkaL manam poela mudiyaatchi
kaaNgindra kotravaa vaazhga vaazhga

nin kodi vaazhga padai vaazhga kudi vaazhga
kulam vaazhga nalamum pallaaNdu vaazhga

PS: mannavan vandhaanadi thoezhi
mannavan vandhaanadi thoezhi
manjaththilae irundhu nenjaththilae amarndha
mannavan vandhaanadi thoezhi
manjaththilae irundhu nenjaththilae amarndha
mannavan vandhaanadi

maayavanoe thooyavanoe naayaganoe naan aRiyaen
maayavanoe thooyavanoe naayaganoe naan aRiyaen
mannavan vandhaanadi thoezi

senthamizh sol eduththu isai thoduppaen
vaNNa santhaththilae kavidhai saram thoduppaen
moondru thamizh maalai soottiduvaen 
moondru thamizh maalai soottiduvaen 
ini muppozhudhum kaRpanaiyil
aRpudhamaai vaazhndhirukkum

mannavan vandhaanadi thoezi
manjaththilae irundhu nenjaththilae amarndha
mannavan vandhaanadi

thooviya poovinil maenigaL aadida
naayagan naayagi baavanai kaatta varum
mannavan vandhaanadi....(jathi).....

sa.. ri.. ga.. ma.. pa.. dha.. ni.....
sarigamapadhani suramodu jadhiyodu
naadha geetha raaga baavam thaan peRavae
mannavan vandhaanadi....(jathi)....

kaadhaR kavidhai kadalenap perugida
maadhar manamum mayilena nadamidavae
mannavan vandhaanadi....(jathi)...

siRu malar manamoru kuRu nagai nalam peRa
malarvizhi sivanthida kani idhazh kaninthidavae
mannavan vandhaanadi......(jathi).....

thiththiththaal adhu sem poR kiNNam
thaththith thaavidum thangak kiNNam.....(jathi)....
siththaththaal oru kaadhaR sinnam
thaththith thaavena paavai munnam
en mannavan ...(jathi)....

sa.... sadhamadhu tharavaa
ri.... rigamapadhanisaa
ga.... karuNaiyin thalaivaa
ma.... madhi migu mudhalvaa
pa.... param poruL iRaivaa
tha.... thanimaiyil varavaa
ni.... niRaiyaruL peRavaa
aaLum puvi aezhum kadal aezhum
nadamaadum padi vaaraai..aruL thaaraai...
aaLum puvi aezhum kadal aezhum
nadamaadum padi vaaraai..aruL thaaraai...
anudhinam unai vazhipadum madamayil
ini oru thalaivanaip paNivadhillai

mannavan vandhaanadi...(jathi)....