பாடல்
வ: ஆ..அ...ஆ..ஆஅ.ஆ..
லோ: ஆ..அ...ஆ..ஆஅஆ...
கூவாமல் கூவும் கோகிலம்
கூவாமல் கூவும் கோகிலம்
பொன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
கூவாமல் கூவும் கோகிலம்
பொன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே....
வ: கண் மீதில் பாவை போல் சேர்ந்து நின்றாலே
காதல் எல்லை... பேதமில்லை
கண் மீதில் பாவை போல் சேர்ந்து நின்றாலே
காதல் எல்லை... பேதமில்லை
அன்பு தேனோடும் நீரோடை நாமே
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
என்னாளும் அழியாது என் ஜீவனே....
லோ: கண்ணாடி போலே எண்ணங்கள் யாவும்
பார்வையிலே இங்கு காணுகின்றேன் அன்பே
வார்தைகள் ஏனோ
வ: வீணையின் நாதம் மேவும் சங்கீதம்
நாள்தோரும் நாம் காணும் ஆனந்த இசையாகும்....
வீணையின் நாதம் மேவும் சங்கீதம்
நாள்தோரும் நாம் காணும் ஆனந்த இசையாகும்
லோ: இன்ப வேளை
வ: நமது வாழ்வை
லோ, வ: யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
என்னாளும் அழியாது என் ஜீவனே...
லோ: இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
மணமகனோ இங்கே மணமகளோ அங்கே
வேடிக்கை ஆனதே
இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
மணமகனோ இங்கே மணமகளோ அங்கே
வேடிக்கை ஆனதே
வ: மணமகள் இங்கே மணமகன் அங்கே
நாம் காணும் ஆனந்தம் தாய் தந்தை அறிவாரோ
லோ: இன்ப வேளை
வ: நமது வாழ்வை
லோ, வ: யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
என்னாளும் அழியாது என் ஜீவனே
வ:ஆஅ.ஆஅஆ... லோ: கூவாமல் கூவும் கோகிலம்
பொன் கொண்டாடும் காதல் கோமளம்
லோ, வ: யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
என்னாளும் அழியாது என் ஜீவனே
.