பாடல்
ஆஅஆ...ஆஅஆஆ..அஅஆ..
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
மங்காத பொன்னே....
மங்காத பொன்னே உன் வாய் முத்தம் ஒன்றாலே
மாறாத இன்பங்கள் சேர்ப்பாயடி
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி...
வாடாத ரோஜா உன் மேனி....
வாடாத ரோஜா உன் மேனி
துள்ளி ஆடாதே வா சின்ன ராணி
பூவான பாதம் நோவாத போதும்
புண்ணாகி என் நெஞ்சம் வாடும்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
சீராட வாராய் செந்தேனே இந்த
பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
சீராட வாராய் செந்தேனே
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
செவ்வல்லி கை வண்ணம் காட்டி...
ஆஅஆஆஅ...
செவ்வல்லி கை வண்ணம் காட்டி
எங்கள் சிந்தை எல்லாம் இன்பமூட்டி
நீ ஆடாதே கண்ணே யாரேனும் உன்னை
கண்டாலும் ஆகாது மானே
அன்பென்னும் ஆனந்த பூங்காவிலே நீ
பண் பாட வாராய் செந்தேனே
எங்கள் அன்பென்னும் ஆனந்த பூங்காவிலே நீ பண் பாட வாராய் செந்தேனே
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
.