Old Thamizh film songs
Nalla perai vaanga vendum
Singers: TMS, Shoba, L.R.Anjali (MGR, Kutty Padmini, Baby Sreedevi, T.K.Bagavathy, Pandari Bai)
Music: M.S.Viswanathan
Lyrics: Vaali
Film: Nam Naadu (1969)
Cast: MGR, Jayalalitha
பாடல்
TMS:
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே...
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன்
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று....
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே....
கிளி போல பேசு இளம் குயில் போல பாடு
மலர் போல சிரித்து நீ குரள் போல வாழு
Sh, LRA : லலால லாலா லாலலலால லாலா
லலால லாலா லாலலலால லாலா
TMS: மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.....
TMS: விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
Sh, LRA : விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
TMS: தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
Sh, LRA : தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
TMS: ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
Sh, LRA : ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
TMS: தென் நாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
Sh, LRA : தென் நாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
TMS: நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே....
TMS, Sh, LRA: லால லால லால லால லாலலா
லா லால லால லால லால லாலலால லாலலால
லால லால லால லால லாலலா
.
|