Follow on


Old Thamizh film songs

pon ondru kanden

Singer: TMS, PBS (Sivaji Ganesan, Balaji)
Music: Viswanathan-Ramamoorthy
Lyrics: Kannadasan
Film: Padithal Mattum Podhuma (1962)

பாடல்

சௌ: பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா

ஸ்ரீ: என்னென்று நான் சொல்ல வேண்டுமா....
பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை

சௌ: ஏனென்று நான் சொல்லலாகுமா
ஸ்ரீ:  ஏனென்று நான் சொல்ல வேண்டுமா....

சௌ: நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார சின்னம் அலை போல மின்னும்

ஸ்ரீ:  நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்

சௌ: துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
ஸ்ரீ: துவண்டு விழும் கொடி இடையாள்
துவண்டு விழும் கொடி இடையாள்
சௌ: விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சௌ: சென்றேன்
ஸ்ரீ: ம்ஹூம்
சௌ: கண்டேன்
ஸ்ரீ: ம்ஹூம்
சௌ, ஸ்ரீ : வந்தேன்
சௌ: பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஸ்ரீ: என்னென்று நான் சொல்ல வேண்டுமா....

சௌ: நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்கவில்லை

ஸ்ரீ: உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி
நீ காணவில்லை
நான் கண்ட காட்சி
நீ காணவில்லை

சௌ: என் விழியில்
நீ இருந்தாய்
என் விழியில்
நீ இருந்தாய்

ஸ்ரீ: உன் வடிவில்
நான் இருந்தேன்
உன் வடிவில்
நான் இருந்தேன்

சௌ: நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லையே

சௌ: சென்றேன்
ஸ்ரீ: ம்ஹூம்
சௌ: கண்டேன்
ஸ்ரீ: ம்ஹூம்
சௌ, ஸ்ரீ : வந்தேன்

சௌ: பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா

ஸ்ரீ: என்னென்று நான் சொல்ல வேண்டுமா....
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை

சௌ: ஏனென்று நான் சொல்லலாகுமா
ஸ்ரீ:  ஏனென்று நான் சொல்ல வேண்டுமா....

.