பாடல்
சௌ: ஆழியிலே பிறவாத அலைமகளோ
சு: அஆஆ...ஆஅ....
சௌ: ஏழிசையை பயிலாத கலைமகளோ....
ஊழி நடம் புரியாத மலைமகளோ
உலக தாய் பெற்றெடுத்த தலைமகளோ....
சு: அஆஆஅ...ஆஅ....
சௌ: அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடி எடுத்து வைத்ததோ....
அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடி எடுத்து வைத்ததோ
நான் அன்பு கவிதை சொல்ல சொல்ல
அடி எடுத்து கொடுத்ததோ
அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடி எடுத்து வைத்ததோ
நான் அன்பு கவிதை சொல்ல சொல்ல
அடி எடுத்து கொடுத்ததோ
அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடி எடுத்து வைத்ததோ...
சு: அஆஆஅ...ஆஅ....
சௌ: இளநீரை சுமந்திருக்கும்
தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும்
குளிர் நிலவும் அல்ல
சு: அஆஆஅ...
சௌ: இளநீரை சுமந்திருக்கும்
தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும்
குளிர் நிலவும் அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும்
நீரோடை அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும்
நீரோடை அல்ல
இதற்கு மேலும் இலக்கியத்தில்
வார்த்தையேது சொல்ல
சு: அஆஆஅ...
சௌ: அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடி எடுத்து வைத்ததோ
நான் அன்பு கவிதை சொல்ல சொல்ல
அடி எடுத்து கொடுத்ததோ
அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடி எடுத்து வைத்ததோ
சு: அஆ ஆஹா ஆஹஹஆஅ...
சௌ: தத்தி வரும் தளர் நடையில்
பிறந்ததுதான் தாளமோ
தாவி வரும் கை அசைவில்
விளைந்ததுதான் பாவமோ
தெய்வமகள் வாய் மலர்ந்து
மொழிந்ததுதான் ராகமோ
சு: அஆஆஅ...
சௌ: இத்தனையும் சேர்ந்ததுதான்
இயல் இசை நாடகமோ
.