பாடல்
ஜா: இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தை காண்பாயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
வண்ண மலர்களில் அரும்பாவாள்
உன் மனதுக்குள் கரும்பாவாள்
இன்று அலைகடல் துரும்பானாள்
என்று ஒரு வரி கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
அவள் விடிந்தபின் துயில்கின்றாள்
எனும் வேதனை கூறாயோ
ஸ்ரீ: இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும்
இவள் சொன்னது சரிதானா
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
தன் கண்ணனை தேடுகிறாள்
மன காதலை கூறுகிறாள்
தன் கண்ணனை தேடுகிறாள்
மன காதலை கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள்
என்றதனையும் கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும்
இவள் சொன்னது சரிதானா
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
.