Follow on

Old Thamizh film songs

sodhanai mel sodhanai

Singer: T.M.Soundararajan
Music: M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Film: Thanga Padhakkam (1974)

பாடல்

சௌ: சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி....

சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி....

சொந்தம் ஒரு கை விலங்கு
நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு
நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு
நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு
நான் போட்டது
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி....

ஆதாரம் இல்லை அம்மா
ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லை அம்மா
தத்துவம் சொல்ல
ஆதாரம் இல்லை அம்மா
ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லை அம்மா
தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லை அம்மா
வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல்
அழுதவன் அல்ல
அந்த திரு நாளை மகன் கொடுத்தான்
யாரிடம் சொல்ல

சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி....

பிரமீளா - வசனம்:  மாமா
காஞ்சு போன பூமியெல்லாம்
வத்தாத நதிய பாத்து ஆறுதல் அடயும்
அந்த நதியே காஞ்சு போய்ட்டா
துன்ப படரவங்கெல்லாம் அவங்க கவலயை
தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க
ஆனா தெய்வமே கலங்கி நின்னா
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்

சௌ:  தான் ஆடவில்லை அம்மா
சதை ஆடுது
அது தந்தை என்றும்
பிள்ளை என்றும் விளையாடுது....
தான் ஆடவில்லை அம்மா
சதை ஆடுது
அது தந்தை என்றும்
பிள்ளை என்றும் விளையாடுது

பூவாக வைத்திருந்தேன்
மனமென்பது அதில் பூ நாகம்
புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது
இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால்
மடி தாங்குமா

சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி....



.