பாடல்
சு: ஆஹஹா ஆஹஹா.....
சௌ: மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன ...
சு: மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது....
சௌ: மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன ...
சு: மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
சௌ: ராணி உந்தன் மேனி என்ன
ராஜ வீதி தோட்டம் தானோ
ராணி உந்தன் மேனி என்ன
ராஜ வீதி தோட்டம் தானோ
சு: கேள்வி கேட்ட மன்னன் மேனி
தேவன் கோவில் தோற்றம் தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி
தேவன் கோவில் தோற்றம் தானோ
சு: மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன
சௌ: என்ன ...
சு: மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது....
வெண் பட்டு மேனியில்
கண் படும் வேளையில்
மூடுது மேலாடை
சௌ: கண் படும் வேளையில்
கை படுமோ என்று
கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம்
சு: இலைகளில் ஆடும் கனியாட்டம்
சௌ: கண்ணோட்டம்
சு: என் தோட்டம்...
சௌ: மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன ...
சு: மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது.........
சு: வெண் மலை மேகங்கள்
பொன் வலை போட்டது
கூந்தலில் நீராட
சௌ: மின்னலில் மேனியும்
பின்னலில் கூந்தலும்
மிதப்பது யாராட
புது மழை போலே நீரோட
சு: அதிசய நதியில் நானாட
சௌ: நீயாட
சு: ஆஹா தேனோட....
சௌ: மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன
சு: என்ன ...
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது.........
சௌ: ஓஹோஓ..
சு: ஆஆஆஆ...
சௌ: ஓஹோஓ..
சு: ஆஆஆஆ...