பாடல்
PS: எழில் ஓவியம் பார்த்தேனோ
இதயத்துள்ளே நானே
AMR: அங்கு பார்த்ததைக் கூறாய் நீ
அருமை சுவை தேனே
PS: யாரோ ஓர் சூரன் வந்தானே
நான் கூச்சமதை மறந்தேனே
AMR: மையலாகி அன்பாலே நானே
மறக்காதது உன் முகம் தானே
இனி மறக்காதது உன் முகம் தானே
PS: மறக்காதது ஏனோ சொல்வீர்
அழகு முகம் தானா?
எழில் ஓவியம் பார்த்தேனோ
இதயத்துள்ளே நானே
AMR: அங்கு பார்த்ததைக் கூறாய் நீ
அருமை சுவை தேனே
PS: அபலை என் கண்கள் தடை மீறி
மகிழ்ந்தாடுதைய்யா எதை நாடி...
அபலை என் கண்கள் தடை மீறி
மகிழ்ந்தாடுதைய்யா எதை நாடி
AMR: மலர் இதழோ வேண்டும் என் ராணி
மனப் பீடமே ஏன் புகுந்தாய் நீ?
எந்தன் மனப் பீடமே ஏன் புகுந்தாய் நீ?
PS: புரியாத சொல் வேறுண்டோ
அபலை மறந்தேனா
PS: எழில் ஓவியம் பார்த்தேனோ
இதயத்துள்ளே நானே
AMR: அங்கு பார்த்ததைக் கூறாய் நீ
அருமை சுவை தேனே
தமிழமுத மழை பெய்ய கண்டேன்
அதில் பெருமை மிகுந்தேன் அன்பே
PS: உம்மைக் கண்டே அன்பே கொண்டேன்
இணை சேர்ந்திடவே இன்று துணிந்தேன்
கண்டு இணை சேர்ந்திடவே இன்று துணிந்தேன்
AMR: இணை சேர்ந்து விட்டால் அன்னமே
யார் தடுப்பார் வீணே?
PS: எழில் ஓவியம் பார்த்தேனோ
இதயத்துள்ளே நானே
AMR: அங்கு பார்த்ததைக் கூறாய் நீ
அருமை சுவை தேனே
Lyrics
PS: ezhil oeviyam paarththaenoe
idhayaththuLLae naanae
AMR: angu paarththadhaik kooRaay nee
arumai suvai thaenae
PS: yaaroe oer sooran vandhaanae
naan koochchamadhai maRandhaenae
AMR: maiyalaagi anbaalae naanae
maRakkaadhadhu un mugam thaanae
ini maRakkaadhadhu un mugam thaanae
PS: maRakkaadhadhu aenoe solveer
azhagu mugam thaanaa?
ezhil oeviyam paarththaenoe
idhayaththuLLae naanae
AMR: angu paarththadhaik kooRaay nee
arumai suvai thaenae
PS: abalai en kaNgaL thadai meeRi
magizhnthaadudhaiyyaa edhai naadi...
abalai en kaNgaL thadai meeRi
magizhnthaadudhaiyyaa edhai naadi
AMR: malar idhazhoe vaeNdum en raaNi
manap peedamae aen pugundhaay nee?
endhan manap peedamae aen pugundhaay nee?
PS: puriyaadha sol vaeRundoe
abalai maRandhaenaa
PS: ezhil oeviyam paarththaenoe
idhayaththuLLae naanae
AMR: angu paarththadhaik kooRaay nee
arumai suvai thaenae
thamizamudha mazhai peyya kaNdaen
adhil perumai migundhaen anbae
PS: ummaik kaNdae anbae koNdaen
iNai saerndhidavae indru thuNindhaen
kaNdu iNai saerndhidavae indru thuNindhaen
AMR: iNai saerndhu vittaal annamae
yaar thaduppaar veeNae?
PS: ezhil oeviyam paarththaenoe
idhayaththuLLae naanae
AMR: angu paarththadhaik kooRaay nee
arumai suvai thaenae