பாடல்
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்.....
கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு
காந்தியை போலவே காவியம் உண்டு
முடிவு விளங்காத தொடர் கதை உண்டு
முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு...
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்.....
கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
வானத்தில் இருந்தே கவிதையை முடித்தான்...
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்.....
கருவிலிருந்தே கவிஞனின் பிறப்பு
காலத்தின் பரிசே கவிதையில் சிறப்பு
கற்பனை என்பது கடவுளின் படைப்பு
கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு....
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்.....
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்.....
.